search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயிற்சி முகாம்
    X

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயிற்சி முகாம்

    • தனி மனிதனின் தலைமை பண்பின் குணாதிசயங்கள் குறித்து ரத்தினபிரபு எடுத்துரைத்தார்.
    • ராஜகுமரன் தமது உரையில் மிகச்சிறந்த தலைவர்களை மேற்கோள் காட்டினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்தர மதிப்பீடு உறுதிப் பிரிவு மற்றும் சமவாய்ப்பு மையம் சார்பில் 'தலைமை பண்புகள்' என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

    உள்தர மதிப்பீடு உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்று பேசினார். சமவாய்ப்பு மையத்தின் ஆலோசகர் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியை ராமஜெய லட்சுமி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

    இந்த பயிற்சி முகாமிற்கு பாளை ஜான்ஸ் கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் ரத்தினபிரபு மற்றும் மெப்கோ ஸ்லனக் பொறியியல் கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் முனைவர் ராஜகுமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.

    சிறப்பு விருந்தினர் ரத்தினபிரபு தமது உரையில் தனி மனிதனின் தலைமை பண்பு சூழ்நிலை வரும் பொழுது வெளிவரும் என்றும் தலைமை பண்பின் குணாதிசயங்களான தகவல் பரிமாற்றம், அணுகுமுறை, பொறுப்புணர்ச்சி, உணர்ச்சிபூர்வ அறிவு ஆகியவற்றை விளக்கமாக எடுத்துரைத்தார்.

    முனைவர் ராஜகுமரன் தமது உரையில் மிகச்சிறந்த தலைவர்களை மேற்கோள் காட்டினார். மேலும் தலைமை பண்புகளான புரிதல், ஏற்று கொள்ளுதல் ஆகியவற்றை மாணவர்களிடையே விளக்கமாக எடுத்துரைத்தார். இந்த பயிற்சி முகாமில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    சமவாய்ப்பு மையத்தின் உறுப்பினர் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியை முனைவர் முனீஸ்வரி மற்றும் முதலாம் ஆண்டு முதுகலை பொருளியல் துறை மாணவர் செல்வம் ஆகியோர் நன்றி கூறினார்கள்.

    இந்த பயிற்சி முகாமில் ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி மற்றும் பேராசிரியைகள் ஆரோக்கிய மேரி, பெர்னான்டஸ், ரீட்டா யசோதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×