என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வட வல்லநாட்டில் அங்கக பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
- அங்கக பண்ணையம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான பயிற்சி வடவல்லநாடு கிராமத்தில் நடந்தது.
- அறிவியல் மைய பொருட்பறிஞர் முருகன் அங்கக பண்ணையத்தின் பயன்கள் குறித்து எடுத்துக் கூறினார்.
செய்துங்கநல்லூர்:
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் அங்கக பண்ணையம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான பயிற்சி வடவல்லநாடு கிராமத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் தலைமை தாங்கி பேசினார். விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் சுரேஷ், விதை சான்று துறையில் செயல்படும் திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினார். அறிவியல் மைய பொருட்பறிஞர் முருகன் அங்கக பண்ணையத்தின் முக்கியத்துவம் குறித்தும், பயன்கள் குறித்தும், விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.
வேளாண்மை துணை அலுவலர் பரமசிவம் வேளாண்துறை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார். உதவி தோட்டக்கலை அலுவலர் சிவபெருமாள் துறை செயல்பாடுகள் குறித்து கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேஷ் மற்றும் அட்மா தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜலட்சுமி, மகேஸ்வரி, முத்துசங்கரி ஆகியோர் செய்து இருந்தனர். பயிற்சியில் வடவல்லநாடு கிராமத்தை சேர்ந்த 40 விவசாயிகள் பங்கேற்றனர்.