என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டி அருகே ரூ.12.8 லட்சம் மதிப்பீட்டில் மின்மாற்றி - கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- காமநாயக்கன்பட்டியில் குறைந்த மின்னழுத்த பிரச்சினையை சமாளிக்கும் வகையில் ரூ.12.8 லட்சம் மதிப்பீட்டில் 25 கிலோ வாட் மின் திறன் கொண்ட 3 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது
- இதில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பங்கேற்று மின்மாற்றிகளின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே காமநாயக்க ன்பட்டி யில் குறைந்த மின்னழுத்தம் பிரச்சினையை சமாளிக்கும் வகையில் மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ரூ.12.8 லட்சம் மதிப்பீட்டில் 25 கிலோ வாட் மின் திறன் கொண்ட 3 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ பங்கேற்று மின்மாற்றிகளின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், செயற்பொறி யாளர் கோவில்பட்டி கோட்டம் காளிமுத்து, உதவி செயற்பொறியாளர் கோவில்பட்டி குருசாமி, உதவி செயற்பொறியாளர்கள் மிகாவேல், முனியசாமி தங்கராஜ், முருகேசன் மற்றும் காமநாயக்கன்பட்டி பங்குத்தந்தை அந்தோணி குருஸ் அடிகளார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.