search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை கமிஷனர்அலுவலகத்தில் காதல் கணவரை மீட்டு தர கோரி திருநங்கை மனு
    X

    கோவை கமிஷனர்அலுவலகத்தில் காதல் கணவரை மீட்டு தர கோரி திருநங்கை மனு

    • கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருநங்கைகள் முன்னிலையில் மருதமலை கோவிலில் திருமணம் செய்தோம்.
    • கணவரின் குடும்பத்தினர் அவரை காணவில்லை என பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    கோவை,

    ஈரோட்டை சேர்ந்தவர் மாளவிகா (வயது22).திருநங்கையான இவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார்.

    அப்போது அவர் கூறி–யதாவது:-என்ஜினீயரிங் பட்டதாரியான நான் சென்னி மலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறேன். நான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் இருந்தபோது புதுக்கோட்டையைச் சேர்ந்த கபடி பயிற்சியாளர் மணிகண்டன் (23)என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தோம். பின்னர் நாங்கள் திருமணம் செய்வது என முடிவு செய்தோம். அதன்படி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருநங்கைகள் முன்னிலையில் மருதமலை கோவிலில் வைத்து மாலை மாற்றி இருவரும் திருமணம் செய்தோம்.

    பின்னர் ஒத்தக்கால் மண்டபத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம்.

    இந்த நிலையில் எனது கணவரின் குடும்பத்தினர் அவரை காணவில்லை என பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி நாங்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பின்னர் எங்கள் 2 பேரையும் பீளமேடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு வந்த எனது கணவரின் குடும்பத்தினர் அவரை காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் அவர் மீண்டும் வரவில்லை. எங்கு சென்றார்? என்ன ஆனார்? என தெரியவில்லை. எனவே எனது காதல் கணவரை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

    Next Story
    ×