search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் மரக்கன்று நடும் விழா - கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    தூத்துக்குடியில் மரக்கன்று நடும் விழா - கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • தற்போது மழை காலம் தொடங்கி இருப்பதால் கண்மாயின் 24 மடை கரையோரப்பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
    • கலெக்டர் லட்சுமிபதி புங்கை,வாதம் உள்ளிட்ட ஆகிய 6 வகையான நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி அருகில் உள்ள கோரம்பள்ளம் குளத்தில் சமீபத்தில் தூர்வாரும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது மழை காலம் தொடங்கி இருப்பதால் கண்மாயின் 24 மடை கரையோரப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி கலந்து கொண்டு புங்கை,வாதம், நீர்மருது, இலுப்பை, வெட்டிவேர், இயல் வாழை ஆகிய 6 வகையான நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தாமிரபரணி வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம், தாசில்தார் பிரபாகரன், மணி சுரேஷ், முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்கத் தலைவர் பூபதி, நிர்வாகிகள் ஜோதிமணி, சின்னராஜ், தானியல் மற்றும் விவசாய சங்கத்தினர் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×