search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு காய்ச்சல் பாதித்த 47 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை
    X

    டெங்கு காய்ச்சல் பாதித்த 47 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை

    • திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதித்த 47 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
    • காய்ச்சல் பாதிப்பால் சிறப்பு வார்டில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது.இதனால் இங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.திருச்சியில் ஒரே நாளில் சிறுவன் கர்ப்பிணி உட்பட 7 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.இதனால் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 4 இடங்களில் அமைக்கப்பட்ட டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு வார்டுகள் நிரம்பியதாக நோயாளிகள் தெரிவித்தனர்.இதனால் போதிய படுக்கை வசதி இல்லாமல் ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்கள் டிசார்ஜ் ஆகி செல்லும் வரை புதிதாக வரும் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.டெங்கு காய்ச்சல் அதிகரிப்பால் தனி வார்டில் படுக்கைகள் நிரம்பி காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வருபவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஆனால் இதை திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு மறுத்துள்ளார்.மேலும் அவர் கூறும் போது, திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு என அமைக்கப்பட்ட தனி வார்டுகளில் சுழற்சி முறையில் 3 ஷிப்டுகளில் தலா ஒரு முதுநிலை மருத்துவர், 2 பயிற்சி மருத்துவர்கள், 2 செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது பெரியவர்கள் 28, குழந்தைகள் 14, கர்ப்பிணிகள் 5 என மொத்தம் 47 பேர் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுக்கை பற்றாக்குறை எதுவும் இல்லை. டெங்கு காய்ச்சல் நோயாளிகள் அதிகரிக்கும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும் என்றார்.

    Next Story
    ×