என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் 5 பேர் படுகாயம்
- துறையூர் அருகே கார் விபத்தில் சிக்கியது
- அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்
துறையூர்,
கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 39). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தொழிற் சங்க அமைப்பாளராக இருந்து வருகிறார். இவருடன் அக்கட்சியை சேர்ந்த அறவக்குறிச்சி தொழிற்சங்க செயலாளர் சுரேந்தர் (42), பொருளாளர் சதீஷ் (48), மாவட்ட துணை செயலாளர் கதிரேசன் (40), கரூர் ஒன்றிய செயலாளர் பிச்சைமணி (48), ஆகாஷ் (25) ஆகிய ஆறு பேரும் இன்று காலை வாடகை கார் ஒன்றில் கரூரிலிருந்து புறப்பட்டு கட்சி நிகழ்ச்சி சம்பந்தமாக பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.காரினை கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த மூர்த்தி (59) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கார் துறையூர்-முசிறி பிரிவு சாலை அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்பொழுது சாலையை கடப்பதற்காக சாலையோரம் நின்றிருந்த மேலகுன்னுபட்டியை சேர்ந்த கணேசன் (52), கார்த்திக் (30), சோபனபுரம் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (54) ஆகிய இருவரது இருசக்கர வாகனங்களின் மீது பயங்கரமாக மோதியது.இந்தவிபத்தில் கணேசன், ராமமூர்த்தி ஆகிய இருவரும் சுமார் 20 அடி தூரத்திற்கு தூக்கி இழுத்து செல்லப்பட்டனர். பின்னர் அந்த கார் சாலையோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தின் மீது மோதி நின்றது. இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் விபத்தில் படுகாயங்களுடன் போராடிக் கொண்டிருந்த நபர்களை, மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்தில் காரில் வந்த ஆகாஷ் என்பவரை தவிர மற்ற ஐந்து நபர்களுக்கு கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் எலும்பு முறிவுடன் படுகாயம் அடைந்து துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இது தொடர்பாக துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கார் டிரைவர் குடிபோதையில் இருந்தாரா? அல்லது தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நடந்ததா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூரில் காலை நேரத்தில் கார் தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்