என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்சியில் இரவு நேரங்களில் திறந்த வெளியில் குப்பை கொட்டுவதை தடுக்க சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்க நடவடிக்கை
- தற்போதைய மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தினமும் அதிகாலையிலேயே வார்டுகளுக்கு சென்று தூய்மை பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
- தினமும் காலை 11 மணிக்கு முன்பாக சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்பட்டு விடுகிறது.
திருச்சி,
திருச்சி மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சியாக அறிவிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தினமும் அதிகாலையிலேயே வார்டுகளுக்கு சென்று தூய்மை பணிகளை ஆய்வு செய்து வருகிறார். தினமும் காலை 11 மணிக்கு முன்பாக சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்பட்டு விடுகிறது.
சாலை ஓரங்களில் இரவு நேரங்களில் குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வீட்டின் உரிமையாளர்கள் தங்களுக்கு சொந்தமான காலி இடங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும், வேலி அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது.
இதற்கிடையே வழக்கமாக குப்பை கொட்டும் பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் உடனடியாக பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் சுகாதாரத்தை சீர் கெடுக்கும் வகையில் குப்பைகள் கொண்டு வருவதை ஏற்கனவே அடையாளம் கண்டு இருக்கிறோம். தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால் பழுதடைந்த சாலைகளை சீர் செய்யும் பணிகள் மற்றும் அது தொடர்பான வேலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டி இருக்கிறது. மழைக்காலத்திற்கு பின்னர் கண்டிப்பாக கேமராக்கள் விரைந்து பொருத்தப்படும் என்றார்.
இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், குறிப்பிட்ட இடங்களில் கேமராக்கள் பொருத்தினாலும் வேறு இடத்தை குப்பை கொட்டுபவர்கள் கண்டுபிடித்து அங்கு குப்பையை கொட்ட தொடங்கி விடுவார்கள். இரவு நேரங்களில் ரோந்து சென்று குப்பை கொட்டுவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்