என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காவிரி குடிநீர் தொட்டி கட்டும் பணி-எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே காவிரி குடிநீர் குழாய் தொட்டி கட்டுமான பணிக்கான பூமி பூஜையை தியாகராஜன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- காவிரி குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் குடிநீர் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் தா.பேட்டை பேரூராட்சி பகுதி மக்களுக்கு முசிறி அருகே அய்யம்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்து அங்கிருந்து குழாய் மூலம் தண்ணீர் ஜெம்புநாதபுரம் கிராமத்திற்கு கொண்டுவரப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து நீரேற்று நிலையம் மூலம் மேட்டுப்பாளையம் சென்று பின்னர் தா.பேட்டை பகுதி மக்களுக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
காவிரி குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் குடிநீர் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக பேரூராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆணைக்கிணங்க முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் பரிந்துரையின் பேரில் ரூ.20 லட்சம் மதிப்பில் தா.பேட்டையில் காவேரி குடிநீருக்காக புதிதாக தரைமட்ட நீர் தேக்க தொட்டி (சம்ப்) அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், முசிறி தொகுதி காடுவெட்டி ந.தியாகராஜன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி தரைமட்ட குடிநீர் தொட்டி அமைப்பதற்கான பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், பேரூராட்சி துணைத்தலைவர் மயில்வாகனன் உள்ளிட்ட பலர் இத்திட்டம் குறித்து வாழ்த்தி பேசினர்.
விழாவில் திமுக ஒன்றிய செயலாளர்கள் கே.கே.ஆர் சேகரன், கே.பெரியசாமி, நகர செயலாளர் தக்காளி தங்கராசு, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி நிர்வாகிகள் பிரபாகரன், அரவன், கருணாநிதி, மகாமுனி, ராஜசேகரன், ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக தா.பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து என்.கருப்பம்பட்டி கொட்டம் பகுதிக்கு செல்லும் புதியசாலை சீரமைப்பு பணியையும் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
பொதுமக்களின் நீண்ட கால கேளிக்கையை நிறைவேற்ற பெரும் முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். இறுதியில் பேரூராட்சி தலைமை எழுத்தர் செல்வகுமார் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்