என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சோனியா, ராகுல் மீதான விசாரணையை கண்டித்து காங்கிரசார் போராட்டம்
- சோனியா காந்தி, ராகுல் காந்தி மீதான பொய் வழக்கை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- 10 வருடத்திற்கு முன்பு கொடுத்த பொய் புகார் மீது நடவடிக்கை எடுத்துவரும் அமலாக்கத்துறையை கண்டித்தும் எம்.பி.க்களை தாக்கியதை கண்டித்து கட்சியினர் கோஷம்
திருச்சி:
காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிவிப்புக்கிணங்கவும் திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர், முன்னாள் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் வேண்டுகோளின்படி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை பொய் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் திருவெறும்பூர் வட்டார நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று காலை திருவெறும்பூர் பஸ் ஸ்டாண்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்டத் தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் செந்தில்குமார், ரகுவரன், துவாக்குடி நகர தலைவர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் எழிலரசன், மலை ஆனந்தன், மாவட்ட துணை தலைவர் கோவிந்தன், கும்பக்குடி தங்கவேல், தொண்டமான்பட்டி பாலு, சூரியூர் தங்கராஜ், கூந்தை மாணிக்கம், நடவை சந்திரசேகர், கிளியூர் கல்யாணசுந்தரம், துவாக்குடி மோகன், பாலு, முருகானந்தம், சந்திரமோகன், ஆர். இ.சி.மணி,
கோட்ட தலைவர் ஆனந்தராஜ், துணைத் தலைவர் செய்யது இப்ராகிம்,திருச்சி மாநகர பொதுசெயலாளர் சேக் தாவுத், மகளிர் அணி லட்சுமி, மணிமேகலை, அரசன்குடி சித்திரா, உள்பட மாவட்ட நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், கிராம கமிட்டி நிர்வாகிகள், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் 10 வருடத்திற்கு முன்பு கொடுத்த பொய் புகார் மீது நடவடிக்கை எடுத்துவரும் அமலாக்கத்துறையை கண்டித்தும் எம்பிக்களை தாக்கியதை கண்டித்தும், பொய்வழக்கு போடாதே வழக்கை வாபஸ் வாங்கு எதையும் சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கின்றோம், எதற்கும் அஞ்ச மாட்டோம் என்றும், மத்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் டெல்லி போலீசாரை வன்மையாக கண்டிக்கிறோம் என்று காங்கிரசார் கோஷமிட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்