search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம்
    X

    திருச்சியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம்

    • ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆலோசனை
    • பல்வேறு தலைப்புகளில் அரசு அதிகாரிகள் பேச்சு

    திருச்சி,

    பௌர்ணமி அறக்கட்டளை சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல், தொழில் முனைவோர் கருத்தரங்கம் ஆகிய முப்பெரும் விழா திருச்சியில் நடைபெற்றது. அறக்கட்டளையின் ஆயுட்கால அறங்காவலரும், பொதுப்பணித்துறை ஓய்வு பெற்ற முதன்மை பொறியாளரும், மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு வல்லுனர் குழு உறுப்பினருமான தங்க பிரகாசம் தலைமை தாங்கினார். தலைவர் ஜெகதீஷ் குமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.அறக்கட்டளையின் நிர்வாகிகள் ராஜூ, செந்தில்குமார், காளீஸ்வரன் முன்னிலை வகித்தனர். அசோகன் வரவேற்றார். இந்த விழாவில் 'அம்பேத்கரை படித்தேன், ஐ.ஏ.எஸ். ஆனேன்' என்ற தலைப்பில் ஆந்திர மாநிலம் சிவில் சப்ளை கார்ப்பரேஷன் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஐ.ஏ.எஸ். அதிகாரி வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மதுரை மாவட்ட கூடுதல் கலெக்டர் எஸ்.சரவணன் ஐ.ஏ.எஸ். 'நம்மாலும் முடியும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.அவர் பேசும்போது கூறியதாவது:-மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிப்பது இல்லை. பாட மதிப்பெண் என்பது ஒரு அளவீடு தான். அதனையும் தாண்டி நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. எந்த ஒரு தகுதியும் பிறவியில் இருந்து வருவது அல்ல. தகுதியை நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் மாணவர்கள் பள்ளி கல்லூரியில் படிக்கும்போதே தங்களுக்கான ஒரு எதிர்பார்ப்பை, ஒரு இலக்கை ஏற்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.நமக்கு அடிப்படை என்பது கல்வி தான். 90 சதவீத அரசு பணிகளுக்கு பட்டப் படிப்பு அவசியமாக இருக்கிறது. நாம் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற மனநிலையில் இருந்து முதலில் வெளியே வர வேண்டும். ஐஏஎஸ் படிப்பதற்கு தமிழக அரசு மாதம் ரூ. 7500 உதவித்தொகை வழங்குகிறது. மேலும் பல சலுகைகள் இருக்கிறது. கடினமாக உழைத்தால் வெற்றி பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த விழாவில் சென்னை ஜி.எஸ்.டி. கூடுதல் கமிஷனர் மோகன் கோபு, இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் துணைத் தலைவர் ஜோதி கிருஷ்ணன், சேலம் மத்திய வருவாய் துறை துணை ஆணையர் கண்ணன், வழக்கறிஞர் திருமுருகன் ஆகியோரும் பேசினார்கள் நிகழ்ச்சியில் பிளஸ்-2 முடித்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அம்பேத்கர் பற்றிய பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×