search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தேரோட்டம்
    X

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தேரோட்டம்

    • திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்க தேரோட்டம் நடைபெற்றது
    • நேர்த்தி கடனை செலுத்த பக்தர்கள் இழுத்து வழிபாடு

    மண்ணச்சநல்லூர்,

    திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவட்டு செல்கின்றனர்.பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதற்காகவும், வேண்டுதல் நிறைவேறவும் நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். முடி காணிக்கை, அக்கினி சட்டி எடுத்தல், கரும்பு தொட்டில் ஏந்தி செல்லும், அலகு குத்துதல் உள்ளிட்டவைகள் அடங்கும். அந்த வகையில் தங்க தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதும் சிறப்பு வாய்ந்ததாகும்.இந்த தங்கத்தேர் கோவிலின் உள்பிரகாரம் மற்றும் ராஜகோபுரரத்தை இணைக்கும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் தங்கத் தேரோட்டம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த தங்கத் தேரை தூய்மைபடுத்தி மின் விளக்குகள் பொருத்துப் பணிகள் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.இந்தநிலையில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் விதமாக நேற்று தங்கத் தேர் இழுத்து வழிபாடு நடத்தினர். கோவில் உள்பிரகத்தில் தங்க தேர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு கட்சி அளித்தது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×