search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி 23-வது வார்டில் விடுபட்ட பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை மனு
    X

    திருச்சி 23-வது வார்டில் விடுபட்ட பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை மனு

    • திருச்சி 23-வது வார்டில் விடுபட்ட பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை மனு அளித்தனர்
    • 12 பகுதிகளில் புதை வடிகால் பணிகளும் விரைந்து செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி 23-வது வார்டு சி.பி.ஐ. மாமன்ற உறுப்பினர் சுரேஷ் குமார் மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதனை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியி–ருப்பதாவது:- திருச்சி மாநகராட்சி 23-வது வார்டு காந்திபுரம் பகுதியில் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்ற–னர். இங்கு சுமார் 500 குடியிருப்புகள் உள்ளன. மேலும் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் புதுத்தெரு பகுதியும் உள்ளது. இந்த பகுதிக்கு பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் குழாய் பகு–திக்கும் திட்டம் ஆகியவை விடுபட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி 7 குறுக்கு தெருக்களிலும் கான்கிரீட் சாலைகளும், மழை நீர் வடிகால்களும் மிக மோசமாக உள்ளது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே குடிநீர் குழாய், பாதாள சாக்கடை பணி–களை மேற்கொண்டு, மழை–நீர் வடிகால்கள் கட்டி, புதிய கான்கிரீட் சாலைகள் அமைத்திட உரிய நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் பணிகளை செய்து தர வேண்டும். மேலும் 23-வது வார்டில் விடுபட்ட 17 பகுதிகளில் குடிநீர் திட்ட பிரதான புதிய குழாய்கள் அமைத்தும், 12 பகுதிகளில் புதை வடிகால் பணிகளும் விரைந்து செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.


    Next Story
    ×