என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
லாட்ஜிகளில் தங்குவோர் பட்டியல் தினமும் சமர்ப்பிக்க வேண்டும்
- திருச்சி சமயபுரத்தில் லாட்ஜ் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம்
- லால்குடி டி.எஸ்.பி.அஜய் தங்கம் உத்தரவு
திருச்சி,
திருச்சி மாவட்டம் லால்குடி சமயபுரம் பகுதியை சேர்ந்த லாட்ஜ் உரிமையாளர்களுடனான போலீசார் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. லால்குடி டி.எஸ்.பி. அஜய் தங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், லாட்ஜிகளில் சிசிடிவி கேமிரா பொருத்திட வேண்டும். வருகை பதிவேட்டில் அடையாள அட்டை, ஸிராக்ஸ் காப்பி பெற வேண்டும். சந்தேக நபர்களாக தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மதுபான விற்பனை, சூதாட்டம், விபச்சாரம், மசாஜ் போன்றவற்றை அனுமதித்தால் உரிமம் ரத்து செய்யப்படும். வாகன நிறுத்தம் இடம் உரிய வகையில் ஏற்படுத்திட வேண்டும். நோ பார்க்கிங் போர்டு வைக்கப்பட வேண்டும். விடுதியில் தங்குவோர் பட்டியல் தினமும் காலை 7 மணிக்கு காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். காவல் நிலைய தொலைபேசி எண்கள் பெரிய அளவில் எழுதி வைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சமயபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் செய்திருந்தார்.