என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
- திருச்சி முதலியார் சத்திரம் குட்ஷெட்டில் 300 லாரிகள் இயங்கி வருகின்றன.
- திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம் உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்கு அரிசி, சிமெண்ட், உரம், கோதுமை உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் லாரி மூலமாக எடுத்து சென்று சப்ளை செய்யப்படுகிறது
திருச்சி,
திருச்சி முதலியார் சத்திரம் குட்ஷெட்டில் 300 லாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு சரக்கு ெரயில்களில் வரும் அத்தியாவசிய பொருட்கள் இந்த லாரிகள் மூலம் 20 மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த நிலையில் ரோடு வசதி மற்றும் பார்க்கிங் வசதி கேட்டு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், குட்செட் லாரி உரிமையாளர்கள் சங்கம், மலைக்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்கம், காண்ட்ராக்டர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் இணைந்து இன்று முதல் குட்ஷெட் லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இதில் 300-க்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் எம்.சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஜி. கே.முருகேசன், சேகர் மாரி செல்வம் சத்தியமூர்த்தி உள்ளிட்ட சங்க பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். பின்னர் குட்ஷெட் தலைமை கூட்ஸ் பொறுப்பாளர் ஜான்சனிடம் மனு அளித்தனர்.
இதுபற்றி சங்கர் கூறும்போது, முன்பு ெரயில்வே இடத்தில் லாரிகளை பார்க்கிங் செய்தோம். இப்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் குட்செட் லாரி உரிமையாளர்கள் செய்வதறியாமல் திகைக்கின்றோம். நாங்கள் இங்கிருந்து திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம் உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்கு அரிசி, சிமெண்ட், உரம், கோதுமை உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் லாரி மூலமாக எடுத்து சென்று சப்ளை செய்கிறோம்.
நாளைய தினம் வட மாநிலத்தில் இருந்து இரும்பு கொண்டுவரப்படுகிறது. அதனை நாளைக்கு மறித்து போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றோம். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றார்.