என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
லாரியில் இருந்து தவறி விழுந்த முசிறி கூலித்தொழிலாளி பரிதாப சாவு
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாப சாவு
- தொழிலாளர் தினத்தன்று சோகம்
முசிறி,
சேருகுடி கேனிப்பள்ளம் அருகே இயங்கி வரும் தனியார் கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவரும் அதே பகுதியை சேர்ந்த வெங்குடுசாமி மகன் சண்முகராஜ் (வயது 42). இவருக்கு கார்த்திக், கவின் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் கோழிப்பண்ணையில் லாரியில் கோழிகளை ஏற்றும் பணி செய்து கொண்டிருந்த போது, லாரியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த அவருக்கு முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அங்கே பணிபுரிந்த பணியாளர்கள், முசிறி கைகாட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை சேர்த்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் ஈடுபட போவதாக முசிறி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. முசிறி எஸ்.ஐ. நாகராஜ் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உறவினர்களிடம், பேச்சு வார்த்தை நடத்தி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மே தினத்தன்று கூலித்தொழிலாளி இறந்த போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.