என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அண்ணா பிறந்தநாளை யொட்டி திருச்சி மத்திய சிறை ஆயுள் கைதிகள் 14 பேர் விடுதலை
- அண்ணாவின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
- இந்த பிறந்த நாளை முன்னிட்டு சிறைகளில் தண்டனை பெற்று வரக்கூடிய கைதிகளில் நன்னடத்தையோடு இருக்கும் கைதிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.
திருச்சி,
அண்ணாவின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பிறந்த நாளை முன்னிட்டு சிறைகளில் தண்டனை பெற்று வரக்கூடிய கைதிகளில் நன்னடத்தையோடு இருக்கும் கைதிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.
அதன் படி இன்று திருச்சி மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 12 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை திருச்சி மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை பெற்று கைதிகளாக இருந்த ராஜா, சுந்தர்ராஜன், சாமிநாதன், ராமதாஸ், சின்னத்தம்பி, நாகேந்திரன், ரமேஷ், நாகராஜ், சுதாகர், ரஞ்சித், குமார், பச்சையப்பன், சாமிதுரை மற்றும் பெண்கள் மத்திய சிறையில் இருந்து இரண்டு பேரும், மொத்தம் 14 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக சிறை கைதிகள் யாரும் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்படாத நிலையில் இந்தாண்டு திருச்சி மத்திய சிறையில் இருந்து 14பேரும், புதுக்கோட்டை சிறையில் இருந்து நான்கு பேரும் என மொத்தம் 18 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.