search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடை வீதிகளில் பூஜை பொருட்கள் வாங்க திரண்ட மக்கள்
    X

    கடை வீதிகளில் பூஜை பொருட்கள் வாங்க திரண்ட மக்கள்

    • கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு கடை வீதிகளில் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் திரண்டனர்
    • அகல் விளக்குகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது

    திருச்சி,

    தீபாவளி, பொங்கல் பண்டிகை போன்று இந்து மக்கள் கொண்டாடும் திருநாள் தான் தீபத்திருநாள். இந்த நாளில் மக்கள் அனைவரும் வீடு எங்கும் விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவது வழக்கம்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பெண்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவார்கள். வீட்டின் முன்பு மற்றும் மாடிப்பகுதியில் வரிசையாக அகல் விளக்குகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றுவார்கள். மேலும் வீட்டையே கோவிலாக மாற்றும் வகையில் வீடு, வாசல் முழுவதும் விளக்குகளை ஏற்றி கொண்டாடுவார்கள்.

    மேலும் வணிக நிறுவனங்கள், கோவில்களில் அதிக அளவிலான விளக்குகள் ஏற்றப்படும். சிவன் கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெறும். தீபத்திருநாளையொட்டி திருச்சியில் அகல்விளக்குகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

    சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகளில் பலவிதமான அகல்விளக்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு வியாபாரிகள் விற்பனை செய்தனர். அவற்றை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 வரையிலும் அகல்விளக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அகல்விளக்கு ஏற்றுவதற்கு தேவையான தீப எண்ணெய், விளக்கு திரிகள் உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது. இதனை வாங்கி செல்வதற்காக பொதுமக்கள் கடை வீதிகளில் திரண்டனர்.

    Next Story
    ×