என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாய்க்கால்களை தூர் வாரகோரி கலெக்டரிடம் மனு
- வாய்க்கால்களை தூர் வாரகோரி கலெக்டரிடம் மனு வழங்கப்பட்டது
- விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் அளித்தார்
திருச்சி:
தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற சங்கத்தின் மாநில துணை தலைவர் மனோகரன், திருச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தற்போது சம்பா நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு லட்சக்கணக்கில் முதலீடு செய்து நாற்று நட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய வாய்க்கால்கள், கண்மாய்கள் ஆக்கிரமிப்பு செய்து சிலர் வீடு , கடைகள் கட்டி வைப்பதால் மழைக்காலங்களில் நீர் செல்வதற்கு இடமில்லாமல் தேங்கி நின்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவும் பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
பெட்டவாய்த்தலையில் உள்ள அய்யன் வாய்க்கால் கடந்த இரண்டு வருடமாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் இருந்து கடமடை பகுதிக்கு நீர் செல்ல முடியாமல், சுமார் 300 ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே போன்று முசிறி, காட்டுப்புத்தூர், ஆமூர், அய்யம்பாளையம், செவந்தலிங்கபுரம், ஆசாரி பாளையம், வெள்ளூர், போன்ற பகுதிகளில் செங்கல் காளவாய் உரிமையாளர்கள், வாய்க்கால் பகுதிகளை ஆக்கிரமித்து நீர் செல்ல முடியாத வகையில் உள்ளது . இதனால் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்ய முடியாமல் வீடு கட்டும் நிலங்களாக மாறி வருகிறது.
இது சம்பந்தமாக பொதுப்பணித்துறை செயற்பொ றியாளர்களுடன் மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுக்கள் மீதான நடவடிக்கையில் 30 நாட்களுக்குள் மேற்படி பணிகளை அதிகாரிகள் செயல்படாவிட்டால் தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பாச பரிமளம் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி முசிறி கைகாட்டியில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்திருந்தனர்.