என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போலீசாரை கண்டித்து சாலை மறியல் போராட்டம்
- மணப்பாறையில் வாலிபரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியல் போராட்டம்
- மணப்பாறை அரசு மருத்துவமனை முன்பு போராட்டம்
மணப்பாறை,
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை ஆயிரக்கணக்கானோர் வேடிக்கை பார்த்தனர். அப்போது ஆனையூரை சேர்ந்த யோகேஷ்வரன் (வயது 22) என்ற வாலிபர் ஒலி பெருக்கி அருகே நின்று ரசித்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு சென்ற 2 போலீசார் யோகேஷ்வரனை திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வாலிபருக்கு முகத்தில் காயம் ஏற்படவே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வாலிபரின் உறவினர்கள் உள்ளிட்டோர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் திரண்டனர்.மேலும் வாலிபரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மருத்துவமனை முன்பு மணப்பாறை - விராலிமலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மணப்பாறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.