என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் 24-ந்தேதி நடைபெறும் ஓ.பி.எஸ். மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி
- திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் 24-ந்தேதி நடைபெறும் ஓ.பி.எஸ். மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது
- நாளை பிரீஸ் ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது
திருச்சி:
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஓரங் கட்டப்பட்டார். அதைத் தொடர்ந்து அரசியல் களத்தில் தனியாக இயங்கி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து போராடி வரு–கிறார்.இந்த நிலையில் வரவிருக் கின்ற பாராளுமன்ற தேர் தலை முன்னிட்டு தனது பலத்தை நிரூபிப்பதற்காக திருச்சியில் மாநிலம் தழுவிய மாநாடு நடத்த திட்டமிட்டார். அதன்படி இந்த மாநாடு வருகிற 24-ம் தேதி திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதற்கான காவல்துறை அனுமதி மற்றும் ரயில்வே துறை அனுமதியை பெற்றுள்ளனர்.இதற்கிடையே நாளை (திங்கட்கிழமை) மாலை திருச்சி பிரீஸ் ஓட்டலில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்துகொண்டு ஆலோ–சனைகள் வழங்குகிறார். மாநாடு முன்னேற்பாடுகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.