என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் உலக அமைதிக்கான ஓவியப்போட்டி
- உலக அமைதிக்கான மாபெரும் ஓவியப் போட்டி திருச்சி குழுமணி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
- சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
திருச்சி
திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் உலக அமைதிக்கான மாபெரும் ஓவியப் போட்டி திருச்சி குழுமணி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் சாசன தலைவர் லயன் முகமது ஷபி தலைமை தாங்கினார்.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு தகுதி என்ற தலைப்பில் தன்னம்பிக்கை பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்கத்தை ஆத்மா மருத்துவமனை மனநல ஆலோசகர் கரன்லூயிஸ் நடத்தினார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். செயலாளர் பிரசன்ன வெங்கடேஷன், பொருளாளர் ரெங்கராஜன், இயக்குனர் பாஸ்கரன்,இயக்குனர் குமார், சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், உறுப்பினர் வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், தலைமை பண்பு ஒருங்கிணைப்பாளர் சரவணன், சாசன உறுப்பினர் ராஜூ ஜோசப் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழும் வழங்கி சிறப்பித்தனர்.
இறுதியில் செயலாளர் பிரசன்ன வெங்கடேஷன் நன்றியுரை கூறினார்.