search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதிச்சநல்லூரில்  அகழாய்வு பணிகளை பார்வையிட்ட தூத்துக்குடி கல்லூரி மாணவிகள்
    X

    அகழாய்வு பணிகளை பார்வையிட்ட தூத்துக்குடி கல்லூரி மாணவிகள்.

    ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகளை பார்வையிட்ட தூத்துக்குடி கல்லூரி மாணவிகள்

    • சி சைட் என அழைக்கப்படும் பகுதியில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழியில் உள்ள முதுமக்கள் தாழியில் தங்கத்தால் ஆன 3.5 சென்டி மீட்டர் நீளம் கொண்ட நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலெட்சுமி, கல்லூரி முதுகலை தமிழ் இலக்கியம் பயிலும் 2-ம் ஆண்டு மாணவிகள் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையை பார்வையிட வந்தனர்.

    செய்துங்கநல்லூர்:

    ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது.

    நெற்றிப்பட்டயம்

    இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வு பணிகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் 3 இடங்களில் நடந்து வருகிறது.

    சி சைட் என அழைக்கப்படும் பகுதியில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழியில் உள்ள முதுமக்கள் தாழியில் தங்கத்தால் ஆன 3.5 சென்டி மீட்டர் நீளம் கொண்ட நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே முதுமக்கள் தாழியில் வெண்கலத்தால் ஆன ஜாடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஜாடியில் அலங்காரமாக சுற்றி ஐந்து இடத்தில் ஜாடியின் மேல் கொக்கு, வாத்து பறவைகள் நீர் அருந்துவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலெட்சுமி, கல்லூரி முதுகலை தமிழ் இலக்கியம் பயிலும் 2-ம் ஆண்டு மாணவிகள் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையை பார்வையிட வந்தனர். சிவகளையில் தொல்லியல் இயக்குனர் பிரபாகரன், இணை இயக்குனர் விக்டர் ஞானராஜ் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

    பின்னர் அவர்கள் ஆதிச்சநல்லூரில் தங்கம் கிடைத்த குழி, தங்க நெற்றி பட்டயம் மற்றும் வெண்கல பொருள்கள் கிடைத்த குழியை பார்வையிட்டனர். அவர்களுக்கு தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ், தொல்லியல் ஆய்வாளர் யத்தீஸ் குமார் ஆகியோர் விளக்கம் அளித்தனர். அதன் பின் ஆர்வத்தோடு கல்லூரி மாணவர்கள் ஆய்வாளர்களுடன் குழு படம் எடுத்துக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஏ.பி.சி. மகாலெட்சுமி கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் சுப்புலெட்சுமி, உதவி பேராசிரியர் புஷ்பக வல்லி, வரலாற்று துறை தலைவர் சங்கீதா, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கந்தசுப்பு, வரலாற்றுதுறை ஆசிரியர் சிவகளை மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தொல்லியல் மண்டல இயக்குனர் அருண்ராஜ் மற்றும் ஆய்வாளர் யத்தீஸ்குமார் மற்றும் தொல்லியல் குழுவினரை பாராட்டியுள்ளார்.

    தொல்லியல் ஆர்வலர்கள் சார்பிலும் ஆய்வாளர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை தாங்கினார். முனைவர் கந்தசுப்பு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×