என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடன்குடி-நெல்லை அரசு பஸ்கள் இடைநிறுத்தம்- பயணிகள் அவதி
- மதியநேரத்தில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மாறுவதால் சில அரசுபஸ்கள் இடைநிறுத்தம் செய்கிறது.
- நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து உடன்குடிக்கு புறப்படும் பஸ் முறையாக வருவதில்லை. இதை நம்பி காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
உடன்குடி:
ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத், மெஞ்ஞானபுரம் வழியாக உடன்குடிக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் அதிகமான மக்கள் பயணம் செய்கிறார்கள்.
உடன்குடி, மெஞ்ஞானபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதி உள்ள 100-க்கு மேற்பட்ட கிராம மக்கள்நெல்லைக்கு செல்லும்போதும் நெல்லை, பாளை, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து உடன்குடி பகுதிக்கு வருபவர்களும் இந்த வழித்தடத்தை தான் அதிகமாக விரும்புகின்றனர்.
அதனால் நெல்லையில் இருந்து உடன்குடிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தவறாமல் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் மதியநேரத்தில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மாறுவதால் சில அரசுபஸ்கள் இடைநிறுத்தம் செய்கிறது. உடன்குடியில் இருந்து புறப்படும் பஸ் ஸ்ரீவை குண்டத்தில் திரும்புகிறது.
நெல்லையில் இருந்து புறப்படும் பஸ் ஸ்ரீவைகுண்டத்தில் திரும்புகிறது. இதனால் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து நண்பகல் 12.30-க்கு உடன்குடிக்கு புறப்படும் பஸ் முறையாக வருவதில்லை. இதை நம்பி காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
இதனால் மதிய நேரத்தில் சுமார் 3 மணி நேரம் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் நிலை உருவாகிறது. இதனால் மதிய நேரத்தில் முறையாக அரசு பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இது பற்றி பயணி ஒருவர் கூறியதாவது, கட் சர்வீஸ் என்ற பெயரில் சுமார் 3 மணி நேரம் நெல்லை -உடன்குடிக்கு பஸ் போக்குவரத்தினை தடை செய்தால் உடன்குடியில் பஸ்களை சிறைபிடிக்கும் போராட்டம் பயணிகள் சார்பில் நடைபெறும் என்றார்.