search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளக்குடியில், முனைப்பு இயக்க கூட்டம்
    X

    கூட்டத்தில் திருத்துறைப்பூண்டி வேளாண்மை இயக்குனர் சாமிநாதன் பேசினார்.

    விளக்குடியில், முனைப்பு இயக்க கூட்டம்

    • 50 சதவீத மானியத்தில் உளுந்து பயறு வகைகள் விவசாயிகளுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
    • விவசாயிகள் வருகிற 15-ந் தேதிக்குள் தங்களது உளுந்து பயிரை காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் இந்த ஆண்டு அதிக அளவு நஞ்சை தரிசில் பயிர் வகை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் ஆர்வமுடன் நஞ்சை தரிசில் பயறு வகை விதைப்பு செய்து வருகின்றனர்.

    இந்தமாதம் 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை பெய்த பருவம் தவறிய மழையால் விதைப்பு செய்யப்பட்டுள்ள உளுந்து பயறு பாதிக்கப்பட்டுள்ளது.

    அதனால் மீண்டும் உளுந்து பயறு சாகுபடி செய்வதற்கு 50 சதவீத மானியத்தில் உளுந்து பயறு வகைகள் விவசாயிகளுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை கொடுத்து வந்த பயறு வகை சாகுபடி கடந்த சில ஆண்டுகளாக வெகுவாக குறைந்துவிட்டது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    எந்திரம் மூலம் அறுவடை நடைபெறுவதால் உளுந்து பயருக்கு தேவையான ஈரப்பதம் மண்ணில் இல்லாமல் உள்ளது.

    மேலும் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுவதால் பயறு சேதபடுத்தப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் உளுந்து பயறு தெளிப்பதை நிறுத்திவிட்டனர்.

    எனவே கால்நடைகளை கட்டுப்படுத்தி முறைப்படுத்துவதற்கு அரசு, கால்நடை பட்டிகள் திறக்க வேண்டும்.

    அப்போதுதான் உளுந்து பயறு சாகுபடி நஞ்சை தரிசில் அதிக அளவு நடைபெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்தநிலையில் விளக்குடி கிராமத்தில் நடந்த முனைப்பு இயக்க கூட்டத்தில் திருத்துறைப்பூண்டி வேளாண்மை இயக்குனர் சாமிநாதன் பேசும்போது, விவசாயிகள் வருகிற 15-ந் தேதிக்குள் தங்களது உளுந்து பயிரை காப்பீடு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் ஊராட்சி தலைவர் தனலட்சுமி செல்வம், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பாஸ்கர், ஊராட்சி துணை தலைவர் வடிவேல் மற்றும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×