என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தல்
- மணல் கொள்ளையை தடுத்திட தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- சமுத்திர ஏரிக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு ஏரியை அகலப்படுத்தி ஆழப்படுத்திடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் மாவட்ட தலைவர் சேவையா தலைமையில் நடைபெற்றது. துணை செயலாளர் துரை.மதிவாணன், உடல் உழைப்பு சங்க மாவட்ட பொது செயலாளர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட செயலாளர் தில்லைவனம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த கூட்டத்தில், தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்திடவும், குவாரிகளை முறையாக செயல்படுத்தவும் கண்காணிப்பு குழு அமைப்பதுடன், அரசு நிர்ணயித்த விலைக்கு மணல் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வருகிற 19-ந்தேதி தஞ்சை ரெயிலடி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது,
சமுத்திர ஏரிக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு ஏரியை அகலப்படுத்தி ஆழப்படுத்திடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.