என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாம்பவர்வடகரை ராமசாமி கோவில் வைகாசி விசாக தேரோட்டம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- வைகாசி விசாகப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கடந்த 24-ந்தேதி கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- வைகாசி விசாக திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது.
சாம்பவர்வடகரை:
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ராமசாமி கோவிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கடந்த 24-ந்தேதி கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேரோட்டம்
தொடர்ந்து கோவிலில் கொடிமரத்தில் கால்நாட்டு தல் நிகழ்ச்சியும், பின்னர் தேரில் கால்நாட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மதியம் அன்னதானம், இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வைகாசி விசாக திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. 10-ம் நாளான நேற்று தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக நேற்று காலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் மதியம் 2 மணிக்கு சுவாமி தேருக்கு புறப்பட்டு வருதலும், செண்டை மேளம் முழங்க 3 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தொடர்ந்து இரவு சிறப்பு பூஜைகளும், 9 மணிக்கு இன்னிசை கச்சேரியும், அதனைத் தொடர்ந்து வில்லிசையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருவிழா விற்கான ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின்முறை கமிட்டியினர் செய்திருந்தனர்.