என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விளாத்திகுளம் பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகள் - மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- கரிசல்குளத்தில் நடந்த கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
- தொடர்ந்து புதூர் அருகே ரெட்டியார்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.5.50 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் வைப்பார் ஊராட்சி வைப்பார், கலை ஞானபுரம், கல்லூரணி, துலுக்கன்குளம் கிராமங் களில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ரூ.1.02 கோடி மதிப்பில் 850 குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி தொடக்க விழா நடை பெற்றது. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
மேலும், வைப்பார் சாலையில் இருந்து கல்லூ ரணி சாலை வரையில் முதல் -அமைச்சரின் கிராம சாலைகள் மேம் பாட்டு திட்டத்தில் ரூ.48 லட்சம் மதிப்பில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
விளாத்திகுளம் அருகே கரிசல்குளத்தில் நடந்த கலை ஞரின் வருமுன் காப் போம் திட்ட இலவச மரு த்துவ முகாமை தொட ங்கி வைத்து குழந்தை களுக்கான ஊட்டச்சத்து பெட்டகங் களை வழங்கினார்.
தொடர்ந்து புதூர் அருகே ரெட்டி யார்பட்டி யில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.5.50 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார். மேலும் நாகலாபுரம் அரசு கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் சாலையில் இருந்து ஓடையை கடந்து செல்வதற்கு ஏதுவாக சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சத்தில் கட்டப்பட உள்ள பாலத்துக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
பின்னர் என்.வேடப்பட்டி முதல் புதுப்பட்டி அச்சங்குளம் வரை முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுமார் ரூ.70.98 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் முனிய சக்தி ராமச்சந்திரன், ஒன்றிய தி.மு.க. செய லாளர்கள் அன்பு ராஜன், சின்ன மாரிமுத்து, ராத கிருஷ்ணன், செல்வராஜ், மும்மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், முத்துக்குமார், வடக்கு மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பா ளர் மகேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரகனி காளிமுத்து, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்