search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயி, தொழிலாளி வீட்டில் 14 பவுன் நகை, பணம் கொள்ளை
    X

    விவசாயி, தொழிலாளி வீட்டில் 14 பவுன் நகை, பணம் கொள்ளை

    • பீரோவை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்சிங்கல்பாடி செம்மண் குட்டை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 54) விவசாயி. இவரது மனைவி லட்சுமி.

    நேற்று காலையில் விவசாய வேலை சம்பந்தமாக அண்ணாமலை வெளியே சென்றிருந்தார். .அவரது மனைவி லட்சுமி 100 நாள் வேலை திட்ட பணிக்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றனர்.

    மதியம் வெளியே சென்ற அண்ணாமலை வீடு திரும்பியுள்ளார்.

    அப்போது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து அதிலிருந்து 12 பவுன் நகைகள், 50 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் அண்ணாமலை புகார் அளித்தார்.

    சம்பவ இடத்திற்கு குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி சாமியார்மலை மோர்தானா கால்வாய் அருகே உள்ள புதுமனைப் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம், விசைத்தறி தொழிலாளி.

    நேற்று மதியம் குடும்பத்துடன் வீட்டை பூட்டிக் கொண்டு விசைத்தறி கூடத்திற்கு சென்று வேலையில் ஈடுபட்டுள்ளார்.

    நேற்று இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது மர்ம கும்பல் அங்கிருந்த பீரோ சாவியை எடுத்து 2½ பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து மாணிக்கம் குடியாத்தம் டவுன் போலீசில் நேற்று இரவு புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×