என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேலூரில் 8 பேருக்கு டெங்கு பாதிப்பு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் தற்போது பருவ மழை காரணமாக சளி, இருமல், காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக குழந்தை களுக்கு அதிகளவில் சளி ,காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி குடியாத்தம், பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரி களில் காய்ச்சல் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ளன.
இன்று ஒரே நாளில் வேலூர் மாவட்டத்தில் 227 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் 92 பேர், குடியாத்தத்தில் 10 பேர் பேரணாம்பட்டில் 2 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளனர். இது தவிர தனியார் ஆஸ்பத்திரிகளில் 123 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
இன்று ஒரே நாளில் 8 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பை தடுக்க பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இது குறித்து வேலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் பானுமதி கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் டெங்கு பரவலை தடுக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெங்கு மற்றும் காய்ச்சல் அதிகம் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் ஆர் ஆர் டி குழுவினர் ஆய்வு செய்து சுகாதார பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இது தவிர சனிக்கிழமை தோறும் வேலூர் மாவட்டம் முழுவதும் 37 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்