search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தம் அருகே பா.ம.க. ஆர்ப்பாட்டம்
    X

    டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    குடியாத்தம் அருகே பா.ம.க. ஆர்ப்பாட்டம்

    • டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி நடந்தது
    • 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோஷம் எழுப்பினர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் கூட நகரம் ஊராட்சி பார்வதிபுரம் அருகே உள்ள உள்ளி கூட்டு ரோடு அருகில் பல மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுபான கடை அமைக்கப்பட்டது.

    இந்த டாஸ்மாக் மதுபான கடை அமைக்கப்பட்டதால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதாகவும் இந்த டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற கோரி கூட நகரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை இதனையடுத்து வேலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியில் சார்பில் டாஸ்மாக் கடை அகற்றக் கோரி கடைக்கு எதிரே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என்.குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்ட அமைப்பு செயலாளர் பாலாஜி, மாவட்ட அமைப்பு தலைவர் பாபு யாதவ், ஒன்றிய செயலாளர்கள் தினகரன், காந்திராஜா, காமராஜ் அரவிந்த், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட நகரம் ஊராட்சி மன்ற தலைவர் பி.கே.குமரன் வரவேற்றார்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர்கள் ரமேஷ், முகமதுபாஷா, மாவட்ட பொறுப்பாளர்கள் குணசீலன்அன்பரசன் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள்.

    குடியாத்தம் தாலுகா போலீச இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் 25க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    Next Story
    ×