search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் கிரிக்கெட் மைதானம் ஏற்படுத்தி தரப்படும்
    X

    வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்ற வீனஸ் கிரிக்கெட் கிளப்பிற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் டாக்டர் பி. அசோக் சிகாமணி சுழற்கோப்பை வழங்கினார். 

    தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் கிரிக்கெட் மைதானம் ஏற்படுத்தி தரப்படும்

    • வேலூரில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பேச்சு
    • போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க ஆண்டு விழா மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக ளுக்கு பரிசுகள் வழங்கும் விழாவேலூரில் உள்ள ஜே.பி. எம்.மகாலில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவரும், நறுவீ மருத்துவமனை தலைவரு மான ஜி.வி.சம்பத் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ஸ்ரீதரன் சங் கத்தின் ஆண்டு விழா அறிக் கையை வாசித்தார்.

    இதில், சென்னை சூப்பர் கிங்ஸ்அணியின் தலைமை செயல் அலுவலர் கே.எஸ்.விஸ்வநா தன் கவுரவ விருந்தினராக பங்கேற்றார்.

    விழாவில், சிறப்பு விருந்தின ராக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் டாக்டர் பி.அசோக் சிகாமணி கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள், சுழற்கோப்பைகள் வழங்கினார். அப்வேபோது அவர் கூறியதாவது:-

    வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நல்ல முறையில் இயங்கி வரு வதை காண முடிகிறது. தமிழ கத்தின் அனைத்து மாவட் டங்களிலும் உள்ள கிரிக்கெட் அணிகள் விளையாடுவதற் கான மைதானம் உள்பட தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்ப டுத்தி தரவேண்டும்.

    இதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனைத்து வகையிலும் உதவி செய்ய தயாராக உள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு ஏரா ளமான வாய்ப்புகள் உள்ளன. அவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி சிறந்த கிரிக் கெட் வீரர்களாக உருவாக வேண்டும் என்றார்.

    இதில், தமிழ்நாடு கிரிக் கெட் சங்க துணைசெயலா ளர் டாக்டர் ஆர்.என்.பாபா, வேலூர் மாவட்ட சங்க நிர் வாகிகள் விஜயகுமார், கிருஷ்ணகுமார், தினேஷ்கு மார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சங்க இணைசெயலாளர் ஜி.நாகராஜன் நன்றி கூறினார்.

    Next Story
    ×