என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண்களுக்கு ரூ.1000 வழங்க வீடு வீடாக டோக்கன் வினியோகம்
Byமாலை மலர்20 July 2023 2:45 PM IST
- செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது
- பணியில் ரேசன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர்:
குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதையடுத்து இன்று முதல் ரேசன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக விண்ணப்ப படிவம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி வேலூர் மாவட்டத்திற்கு 4,58,473 விண்ணப்ப படிவங்கள் 70 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 699 ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைகள் உள்ள பயனாளிகள் அனைவருக்கும் வீடு வீடாக விண்ணப்ப படிவங்கள், டோக்கன் வழங்கும் பணியில் ரேசன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் இன்று வீடு வீடாக டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கினர்.
Next Story
×