search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தம் சிரசு ஊர்வல பாதைகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும்
    X

    குடியாத்தம் சிரசு ஊர்வல பாதைகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும்

    • நகர மன்ற கூட்டத்தில் தகவல்
    • ரூ.1 கோடி மதிப்பீட்டில் 13 வாகனங்கள் வாங்கப்பட உள்ளன

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

    நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி பொறியாளர் சிசில்தாமஸ், மேலாளர் சுகந்தி உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

    கவுன்சிலர்கள் அரசு, நவீன் சங்கர், தண்டபாணி, ஆட்டோ மோகன் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன்.

    கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு கெங்கையம்மன் தேர் மற்றும் சிரசு ஊர்வலம் வரும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். சாலைகள் சீரமைக்கப்பட்டும், புதிதாக தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், நடமாடும் கழிப்பிடங்கள், கூடுதலாக மின்விளக்கு வசதி ஆகியவை ஏற்படுத்தப்படும்.

    சொத்துவரி, குழாய்வரி உள்ளிட்ட வரி வகைகளை பெயர் மாற்றம் செய்ய 6 வார்டுகளுக்கு ஒரு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதில் சம்ப ந்தப்பட்ட பொதுமக்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெயர்மாற்றம் செய்து கொள்ளலாம், குடியாத்தம் பகுதியில் குப்பைகளை அகற்ற சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 13 வாகனங்கள் வாங்கப்பட உள்ளன.

    விரைவில் இந்த வாகனங்கள் வரும் அப்போது குடியாத்தம் தூய்மையான நகராக மாறும் குப்பைகள் உடனு க்குடன் அகற்றப்படும், கோழி கழிவு களை கொட்டு பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    பேனர் வைப்பது குறித்து அதிகாரி களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்க ப்படும், சுங்கச்சாவ டிகளில் கட்டண விலக்கு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி உயர் அதிகாரி களுக்கு அனுப்பப்படும் என்றார்.

    இக்கூட்ட த்தில் அடிப்படை வசதிகளான வடிகால் சீர்படுத்துதல், சுகாதார வசதி ஏற்படுத்துதல், சிறுபாலங்கள் அமைத்தல் சிறு மின்விசை பம்புகள் சீர் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×