search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சிலை ஊர்வலம் டிரோன் மூலம் கண்காணிப்பு
    X

    விநாயகர் சிலைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கு எஸ். பி ராஜேஷ் கண்ணன் அறிவுரை வழங்கிய காட்சி.

    விநாயகர் சிலை ஊர்வலம் டிரோன் மூலம் கண்காணிப்பு

    • போலீசாருக்கு பாதுகாப்பு பணி இடங்கள் ஒதுக்கி எஸ்.பி. பேட்டி
    • பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபட உள்ளனர்

    வேலூர்:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி வேலூர் மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசார், ஆயுதப்படை போலீசார் அதிவிரைவு படை மற்றும் கமாண்டோ படை போலீசாருக்கு வேலூர் நேதாஜி மைதானத்தில் பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி இன்று நடந்தது.

    பணியிடம் ஒதுக்கீடு

    இதையடுத்து வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.அப்போது அவர் கூறியதாவது, பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசார் சிலைகளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள வேண்டும். அந்தந்த பகுதியில் உள்ள சூழ்நிலை குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஒரு போலீஸ்க்கு 3 விநாயகர் சிலை பாதுகாப்பு பணி வழங்க படலாம். எந்தவித அசம்பாவித பணிகளும் நடைபெறாமல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். போலீசாருக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்றார்.

    இதையடுத்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    30 மற்றும் 31-ந் தேதிகளில் விநாயகர் சிலை பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபட உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 62 பேரிடம் குற்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என பிரமாண பத்திரம் எழுதி வாங்கப்பட்டு உள்ளது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்லும் பாதையில் 1888 சிசிடிவி கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன மேலும் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. மேலும் 3 டிரோன் கேமராக்கள் மூலம் விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்

    மொபைல் கமெண்ட் கண்ட்ரோல் யூனிட் ஒன்றும் கண்காணிப்பு பணியில் புதிதாக ஈடுபடுத்தப்பட உள்ளது என்றார்.

    Next Story
    ×