search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள் அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்
    X

    மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள் அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்

    • 80 சதவீதம் முடிந்துள்ளது
    • ரூ.19.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது

    வேலூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், காட்பாடி மிலிட்டரி கேன்டீன் அருகே 16 ஏக்கர் பரப்பளவில், 19 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திறந்தவெளி மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் கோகோ, இறகுப்பந்து, கூடைப்பந்து, கபடி, ஹாக்கி, வாலி பால் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான மைதானங்கள், 400 மீட்டர் தடகள் ஓடுபாதை, பார்வையாளர் மாடம் (கேலரி), நிர்வாக அலுவல கம், பெரியவர்கள் மற்றும் சிறுவர் களுக்கான நீச்சல்குளம் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

    இந்த மாவட்ட விளையாட்டு வளாகம், கடந்த மார்ச் மாதம் முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, மாவட்ட விளை யாட்டு வளாகத்தில் ரூ.10 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பில் உள்வி ளையாட்டரங்கம் அமைக்கும் பணி கள் தொடங்கியது. இதில், நிர்வாக அலுவலகம், பயிற்றுனர் அறை,

    சிறப்பு விருந்தினர் அறை, மாநாடு கூடம், உடற்பயிற்சி மையம்,உடை மாற்றும் அறைகள், கழிவறை வச திகள், 250 பேர் அமரும் வகையில் கேலரி, 50க்கு 28 என்ற பரப்பளவில் 1.50மீ சுற்றளவில் தேக்கு மரத்தி னாலான ஆடுகள வசதி ஆகியவை இடம் பெறுகிறது.

    இதற்கான கட்டுமான பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள 20 சதவீத பணிகள் ஒருமாத காலத்தில் முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

    Next Story
    ×