search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ண ஜெயந்தி விழா ஊஞ்சல் உற்சவம்
    X

    கிருஷ்ண ஜெயந்தி விழா ஊஞ்சல் உற்சவம்

    • நந்தகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்புத்தூர் ஊராட்சி, புதூர் கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமையான கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதனை முன்னிட்டு நேற்று காலை கிருஷ்ணருக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    மேலும் கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டுகளான கோலாட்டம், மயிலாட்டம், பொய்கால் குதிரை, சிலம்பாட்டம் போன்றவை நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழை ப்பாளராக அணைக்கட்டு ஏம்.எல்.ஏ நந்தகுமார் கலந்துக்கொண்டு சிலம்பம் ஆடியும், கோவிலில் அருகே கட்டப்பட்டிருந்த உறி அடித்தும் விளையாடினார்.

    பின்னர் கிருஷ்ணர் ஊஞ்சல் உற்சவத்தை தொடங்கி வைத்து சாமி தரிசனம் செய்தார்.

    இதனை தொடர்ந்து நடந்த சாமி திருவீதி உலாவில் புதூர், சோழவரம், பாப்பாந்தோப்பு, காட்டுப்புத்தூர், பென்னாத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்ப்பட்ட கிரா மத்தினர் கலந்துக்கொண்டு கிருஷ்ண ஜெயந்தி தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    விழாவில் கணியம்பாடி ஒன்றியகுழு துணை தலைவர் கஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சசிகலாகோபி, பென்னாத்தூர் பேரூராட்சி செயலாளர் அருள்நாதன், பேரூராட்சி தலைவர் பவானிசசிகுமார், பேரூராட்சி துணை தலைவர் ஜீவசத்தியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×