search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம ஊராட்சிகளில் தனியார் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு
    X

    கிராம ஊராட்சிகளில் தனியார் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு

    • ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது
    • பல்வேறு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் கட்டாய கடமைகளான கிராம சாலைகள், பாலங்கள், தரைப்பாலங்களை பழுதுபார்த்தல், குடியிருப்பு பகுதிகளில் தெரு விளக்குகள் அமைத்தல், கழிவு நீர் கால்வாய் அமைத்து கழிவு நீரை அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், திடக்கழிவு மேலாண்மை பணிகள், பொது கழிப்பிட வசதி ஆகிய பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    மேலும் கிராம ஊராட்சிகளின் விருப்புரிமை பணிகளான மரங்களை நட்டு பாதுகாத்தல், குடியிருப்பு இல்லாத பொது இடங்களில் தெரு விளக்குகள் அமைத்தல், சந்தைகளை ஏற்படுத்தி பராமரித்தல், விழாக்கள் மற்றும் பொருட்காட்சிகளை நெறிப்படுத்துதல், விளையாட்டு திடல்கள், பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    தேசிய ஊராட்சி விருது 2024-ம் ஆண்டிற்கு இணையதள தரவுகள் மூலம் விண்ணப்பிக்கவும், விவரங்களை பதிவேற்றம் செய்யவும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இணைய வழி மூலம் வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, வரி அல்லாத வரி, வர்த்தக உரிமம் ஆகிய நடவடிக்கை களை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

    கிராம ஊராட்சிகளில் தனியார் ஆக்கிரமிப்பில் இருக்கும் ஊராட்சி சொத்துக்களை கண்கா ணித்து ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்க ளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் (பொ) சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×