என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்
- வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் பேச்சு
- உழவர் களஞ்சியம், கண்காட்சி துவக்க விழா நடந்தது
வேலூர்:
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் உழவர் களஞ்சியம் மற்றும் கண்காட்சி துவக்க விழா இன்று நடந்தது. நிகழ்ச்சியில் வி.ஐ.டி. பதிவாளர் ஜெயபாரதி இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், துணைவேந்தர் ராம்பாபு கோடாலி வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், ஜி .வி.செல்வம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குமாரசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம்,வேளாண்மை துறை கூடுதல இயக்குனர் ராஜேந்திரன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ராஜு ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
வி.ஐ.டி. வேந்தர் விஸ்வநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-
கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உழவர் களஞ்சியம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு நடைபெறுவது மகிழ்ச்சி அடைகிறது.
கடந்த ஒரு ஆண்டாக பாலாற்றில் தண்ணீர் வற்றாமல் சென்று கொண்டு உள்ளது. நான் வக்கீலாக, அமைச்சராக, வேந்தராக, எம்.எல்.ஏ.வாக இருந்த போதிலும் அடிப்படையில் நானும் ஒரு விவசாயி தான்.
என்னுடைய தந்தை தேங்காயை விற்று என்னை படிக்க வைத்தார். அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு வார விடுமுறை உண்டு ஆனால் விவசாயிகளுக்கு விடுமுறையே கிடையாது எனவே விவசாயிகளுக்கு உரிய அந்தஸ்தை வழங்க முடியுமா என நாம் சிந்திக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலேயே வட ஆற்காடு தின்ன ஆற்காடு மாவட்டங்களை முன்னேறிய மாவட்டங்களாக மாற்றி காட்ட வேண்டும் கல்வி பொருளாதாரத்தில் நம்முடைய மாவட்டங்கள் பின்தங்கி இருந்தது.
தற்போது முன்னேற்றம் அடைந்து வருகிறது. நிரப்பரப்பில் நாலு சதவீதமும் மக்கள் தொகையில் ஏழு சதவீதமும் நீர் ஆதாரம் 3 சதவீதம் உள்ளது இதை வைத்துக்கொண்டு விவசாயிகள் விவசாயத்தில் வெற்றிக்கான வேண்டும். சீனாவில் நம்மை விட குறைந்த அளவு நிலப்பரப்பு உள்ளது ஆனால் அவர்கள் நம்மை விட இரண்டு மடங்கு வேளாண் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.
கடந்த 1995 முதல் 2014 வரை கடன் தொல்லையால் 2.91 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
விவசாயிகளின் தற்கொலையை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கடந்த 2021-ல் ஒரு நாளைக்கு 15 பேர் தற்கொலை கொண்டனர் மகாராஷ்டிராவில் தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.
அடுத்தது கர்நாடகா, ஆந்திரா ,மத்திய பிரதேசம், தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு ஏராளமான பிரச்சனைகள் உள்ளது. விவசாயிகள் வாங்கிய கடனாக விவசாயிகளின் நிலம் மற்றும் பொருட்களை ஜப்தி செய்யும்போது அவமானத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர் அரசுகள் இதனை கவனிக்க வேண்டும். ரூ 10 ,20 ஆயிரம் கோடி கடன் பெறுபவர்கள் பெறுபவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர்.
தமிழகத்தில் ஆறு ஏரி கால்வாய்களை சரிவர குடிமராமத்து பணி செய்யவில்லை தமிழ்நாட்டில் மொத்தம் 42 ஆயிரம் ஏரிகள் இருந்தது தற்போது 39 ஆயிரம் ஏரிகள் மட்டுமே உள்ளன. அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் ஏரிகள் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிக அளவு மழை பெய்யும் காலங்களில் தடுப்பணைகளை கட்டி தண்ணீரை தடுத்து நிறுத்த வேண்டும். மழைக்காலங்களில் 500 முதல் 1000 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக சென்று கலக்கிறது. மேட்டூர் வைகை அணைகளை தூர்வாராததால் 30 சதவீத அளவுக்கு நீர் இருப்பு குறைந்து விட்டது எனவே அணைகளில் இருந்து மண் மணலை தூர்வாரி அகற்ற வேண்டும் பாலாற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய இரண்டு தடுப்பணைகள் மட்டும் தான் உள்ளது ஆனால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் 17 தடுப்பணைகள் கட்டினார்.
அந்த தடுப்பணைகளை தாண்டித்தான் பாலாற்றில் வெள்ளம் வருகிறது. விவசாயிகள் வேளாண் பொருள் உற்பத்தி திறனை அதிகப்படுத்த முயற்சிக்க வேண்டும் இவ்வாறு பேசினார் விதி எடுத்து வேளாண் பொருட்கள் கண்காட்சியை வேந்தர் விஸ்வநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்