search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு
    X

    பள்ளி மாணவர்களுக்கான தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

    தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு

    • என் குப்பை என் பொறுப்பு என வாசகம்
    • மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சி சார்பில் செதுக்கரை பகுதியில் உள்ள செவன்த் டே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் என் குப்பை என் பொறுப்பு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

    நிகழ்ச்சிக்கு குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜோசப்மோசஸ், முன்னாள் நகர் மன்ற தலைவர் த.புவியரசி, சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் டேனியல் ஜெபமணி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சிறு வயது முதலேயும், பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே வீடுகள் மற்றும் பொது இடங்கள், பள்ளிகளில் குப்பைகளை சேர்க்காமல் பார்த்துக் கொள்வது குறித்தும் தான் உபயோகிக்கும் பொருட்கள் பொது இடங்களில் வீசுவதை தவிர்த்து அதற்கான குப்பை தொட்டியில் போடுவது குறித்தும் அப்பழக்கம் தொடர்ந்து வரவேண்டும் எனவும் குடியாத்தம் நகரை தூய்மையான நகராக மாற்ற மாணவர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    அதேபோல் மாணவர்கள் தங்கள் வீடுகளிலும் தூய்மையாக வைத்துக் கொண்டு என் குப்பை என் பொறுப்பு என நடக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மாணவர்கள் தூய்மையான நகரம் அதற்கான விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் துப்புரவு மேற்பார்வையாளர்கள் பென்னி, சிவக்குமார் தூய்மை பாரத மேற்பார்வையாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் தூய்மை பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் நன்றி கூறினார்.

    Next Story
    ×