search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்க அஞ்சல்துறை ஏற்பாடு
    X

    ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்க அஞ்சல்துறை ஏற்பாடு

    • கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
    • சிறப்பு முகாம்களை பயன்படுத்திகொள்ள அறிவுரை

    வேலூர்:

    வேலூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் நா.ராஜகோபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் 14-வது தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் 11,543 விவசாயிகளும் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிகணக்கு இல்லாமல் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாக அஞ்சல்து றையின் கீழ்செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி துவங்க வேண்டும் எனவும் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்க ளுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் கருவியின் மூலம், விவசாயிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல்ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்க முடியும்.

    இதற்காக மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை யுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி அல்லது அஞ்ச லகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    Next Story
    ×