என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அணைக்கட்டில் பி.டி.ஓ. அலுவலகத்திற்கு பூட்டு போடுவோம்
- தாசில்தாருடன் விவசாயிகள் கடும் வாக்குவாதம்
- குறை தீர்வு கூட்டத்தில் பரபரப்பு
அணைக்கட்டு:
அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் நேற்று நடந்தது. தாசில்தார் வேண்டா தலைமை தாங்கினார். துணை தாசில்தார் திருகுமரேசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசுகையில்:- கடந்த மாதம் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் சாதாரண விவசாயிகள் ஆடு, மாடு கொட்டகைகளை மற்றும் வீடு உள்ளிட்டவை கேட்டு மனு அளித்தனர். இதனை பி.டி.ஓ.க்கள் கண்டு கொள்ளவில்லை. ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் பரிந்துரை செய்யும் நபர்களுக்கு மட்டுமே அடிப்படை வசதிகள் ஆடு, மாடு கொட்டகைகளை ஒதுக்கீடு செய்கின்றன.
இது குறித்து பி.டி.ஓ.க்கள் அடுத்த கூட்டத்தில் வந்து பதில் சொல்ல வேண்டும். இல்லையென்றால் கூட்டத்தை நடத்த விடாமல் பி.டி.ஓ. அலுவலகத்திற்கு பூட்டு போட்டு விடுவோம். பி.டி.ஓ.க்களுக்கு அழைப்பு விடுத்திருந்தும் கூட அவர்கள் ஏன் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை? என கேட்டு விவசாயிகள் தாடில்தாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பி.டி.ஓ.க்கள் வந்து பதில் சொல்லும் வரை கூட்டத்தை நடத்த விட மாட்டோம் என வலியுறுத்தினர்.
இதனையடுத்து பி.டி.ஓ.க்களிடம், தாசில்தார் வேண்டா செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது அவர்கள், வேலூரில் நடக்கும் கூட்டத்திற்கு சென்று விட்டதாக கூறினர். இதனை அடுத்து துணை பி.டி.ஓ.க்கள் லோகநாதன், சதீஷ்குமார் ஆகியோர் வேக வேகமாக வந்து கூட்டத்தில் பங்கேற்றனர். இதை தொடர்ந்து கூட்டம் நடந்தது. அப்போது தாசில்தார் வேண்டா பேசுகையில்:-
கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிகாரிகள் குறித்து (அட்டனன்ஸ்) வருகை பதிவேடு பின்பற்றப்பட்டு, கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று வருகை தராத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்
கூட்டத்தில் விவசாயிகள், தோட்டக்கலை துறை மற்றும் வேளாண்மை துறையில் 100 சதவீதம் மானியத்துடன் இலவசமாக கொடுக்கப்படும் திட்டத்தை செயல்படுத்த பயனாளி களிடமிருந்து, அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகவும் அதனை முழுமையாக தடுக்க வேண்டும் என தாசில்தாரிடம் மனு வழங்கினர்.
இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்