என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆசிரியர் வேலூர் கோர்ட்டில் சரண்
- மாணவிகளிடம் சில்மிஷம் செய்த வழக்கு
- வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்
வேலூர்:
குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் லத்தேரியை அடுத்த செஞ்சி பகுதியைச் சேர்ந்த கே.ராமன் (வயது 44) என்பவர் பட்டதாரி அறிவியல் ஆசி ரியராக கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாங கூறப்படுகிறது. இது குறித்து கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி ஒரு மாணவி பெற் றோரிடம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
அதைத்தொடர்ந்து ஆசிரியர் மீது குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ உள் ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் ஆசிரியர் ராமன் தலைமறைவானார். மேலும் அவர் முன்ஜா மீன் கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து தலைமறை வாக இருந்த ஆசிரியர் ராமன் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று வேலூரில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி கலைப்பொன்னி உத்தர விட்டார். அதன்பேரில் ஆசி ரியர் ராமன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.