search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீ ராமர், சீதைக்கு திருக்கல்யாண வைபவம்
    X

    நெல்வாய் கிராமத்தில் ஸ்ரீராமர், சீதை திருக்கல்யாண வைபவம் நடந்த காட்சி.

    ஸ்ரீ ராமர், சீதைக்கு திருக்கல்யாண வைபவம்

    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • நெல்வாய் ஸ்ரீபட்டாபிராமசாமி கோவிலில் நடந்தது

    அணைக்கட்டு:

    ராம நவனியை முன்னிட்டு ஸ்ரீ ராம பெருமாள், சீதைக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

    வேலூர் மாவட்டம் நெல்வாய் கிராமத்தில் அமைந்திருக்கும் 750 வருடங்கள் வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்த ஸ்ரீபட்டாபிராமசாமி பெருமாள் கோவிலில் ஸ்ரீராமநவமியை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

    புனர்பூசம் நட்சத்திரத்தில், ஸ்ரீ பட்டா பிராமசாமி பெருமாளுக்கு அதிகாலையில் பால், பழம், தேன் கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது.

    அதை தொடர்ந்து மாலை ஸ்ரீராமருக்கு காப்புக்கட்டுதல் வைபோவம் நடைபெற்றது. அதன்பின் ஸ்ரீராமபெருமாளுக்கும் அன்னை சீதைக்கும் ராஜ அலங்காரத்துடன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    அதற்கு முன்னதாக பட்டாட்சியர்களால் நடனமாடி ஸ்ரீராமபெருமாளுக்கும் சீதைக்கும் மாலை மாற்றுதல் வைபவம் நடைபெற்றது. இதில் சீதை நடனம் ஆடிய நிலையில் கொண்டுவரப்பட்டார்.

    இந்த திருக்கல்யாண நிகழ்வில் நெல்வாய் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீராமர் சீதை திருக்கல்யாண வைபவத்தில் கலந்துகொண்டு கல்யாணத்தை கண்டுகளித்து தரிசனம் செய்து சென்றனர்.

    பின்னர் திருக்கல்யாணம் கான வந்த அனைத்து பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×