search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்வப்பெருந்தகை தலைமையில்  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி.
    X

    செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி.

    • பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி ராகுல்காந்தி வலியுறுத்தி வருகிறார்.
    • பாஜக அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை.

    பங்குச்சந்தை மோசடிகள் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரியும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தியும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் எதிரே காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்த போராட்டத்தில் தேசிய செயலாளர் ஸ்ரீவெல்ல பிரசாத், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் ஜோதிமணி, சசிகாந்த் செந்தில், விஜய் வசந்த், டாக்டர் விஷ்ணுபிரசாத், வக்கீல் சுதா உள்ளிட்ட எம் பிக்கள், விளவங்கோடு தொகுதி எம் எல் ஏ தாரகை கத்பர்ட், மாநில துணைத் தலைவர் கோபண்ணா, செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார், பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், டி.செல்வம், பி.வி.தமிழ்செல்வன், காண்டீபன், மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஹசீனா சையத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை பேசியதாவது:-

    அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் பங்குச்சந்தை மோசடியை ஆதாரத்துடன் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பும், பின்பும் பங்குச்சந்தை செயற்கையான ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இதனால் ரூ,35 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதன் பின்புலத்தில் செபியின் தலைவர் மாதபி பூரி புச் இருந்து, அதானி நிறுவனங்களின் பங்குகளை செயற்கையான முறையில் ஏற்ற, இறக்கம் காணச் செய்தார்.

    இது குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி ராகுல்காந்தி வலியுறுத்தி வருகிறார். ஆனால், மத்திய அரசு மறுத்து வருகிறது. அதுபோல சமூக நீதி மீது நம்பிக்கை இல்லாத பாஜக அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×