search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில்  100 நாள் வேலை திட்ட பணி ஊதியம்  வழங்கக்கோரி திரண்ட கிராம மக்கள் - தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
    X

    கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள். 

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 100 நாள் வேலை திட்ட பணி ஊதியம் வழங்கக்கோரி திரண்ட கிராம மக்கள் - தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

    • நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.
    • கடந்த மே மாதத்திற்கு பிறகு சுமார் 4 மாதங்கள் ஆகியும் இதுவரை 100 நாள் வேலை திட்ட தொழிலா ளர்களுக்கான சம்பளத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று மனுவில் கூறியுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத் திற்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    மானூர் யூனியன் பல்லிக் கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பள்ளமடை கிராம மக்கள், மாவீரன் சுந்தரலிங்க னார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்பபாண்டி யன் தலைமையில் திரண்டு வந்தனர்.

    திடீரென அவர்கள் கலெக்டர் அலுவலக வளா கத்திற்கு வெளியே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

    தொடர்ந்து மாரியப்ப பாண்டியன் தலைமையில் ஊர் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது:-

    பல்லிக்கோட்டை பஞ்சா யத்துக்குட்பட்ட பள்ளமடை கிராமத்தில் வசிக்கும் பெண்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் வேலையின் மூலமாக பிழைப்பு நடத்து கின்றனர். இந்நிலையில் இந்த கிராம மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படு வதில்லை. அதிகபட்சம் 40 நாட்கள் வரை மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. அதிலும் சம்பளமும் முறை யாக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை.

    கடந்த மே மாதத்திற்கு பிறகு சுமார் 4 மாதங்கள் ஆகியும் இதுவரை 100 நாள் வேலை திட்ட தொழிலா ளர்களுக்கான சம்பளத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.

    இது தொடர்பாக மானூர் யூனியன் அதிகாரிகளிடம் கேட்டாலும் முறையாக பதிலளிக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு சம்பளத்தை வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைக்கு வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    Next Story
    ×