என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
- கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
- கைத்தொழில் திறன் பயிற்சி அளிக்கும் நிலையம் நடத்தியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மூடியிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மீளவிட்டான், மடத்தூர், புதூர் பாண்டியாபுரம், பண்டாரம்பட்டி, சங்கரபேரி, வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி, காயலூரணி, தெற்கு வீரபாண்டியபுரம், சில்லாநத்தம், ராஜாவின் கோவில், சாமிநத்தம், குமாரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், நடுவக்குறிச்சி, குமாரகிரி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஸ்டெர்லைட் ஆலை எங்கள் கிராமத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த ஆலை எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு வேலை அளிக்கும் பிரதான நிறுவனமாக செயல்பட்டு வந்தது. எங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்றவற்றை வழங்கியது. கைத்தொழில் திறன் பயிற்சி அளிக்கும் நிலையம் நடத்தியது.
பள்ளி குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, விளையாட்டில் சிறந்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் எங்களது கிராமத்திற்கே வந்து மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணி போன்றவற்றை ஸ்டெர்லைட் நிறுவனம் செய்து வந்தது.
ஆனால் இந்த ஆலை மூடப்பட்டதன் காரணமாக பல ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் நேரடியாக வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். எனவே மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்.
இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.