search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர்-பள்ளி மாணவி உள்பட 5 பேர் மாயம்
    X

    ஆசிரியர்-பள்ளி மாணவி உள்பட 5 பேர் மாயம்

    • ஆசிரியர்-பள்ளி மாணவி உள்பட 5 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே யுள்ள திருவேங்கடபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது50). இவரது 17 வயது மகன் 12ம் வகுப்பு செல்கிறார். அதற்காக சிறப்பு வகுப்பு களுக்கு சென்று கொண்டி ருந்தார்.

    சில நாட்களாக வகுப்புக்கு செல்லவில்லை என தெரிகிறது. இதனால் பெற்றோர் அவரை கண்டித்து வகுப்புக்கு செல்லும்படி கூறியுள்ளனர்.

    இந்தநிலையில் சீனிவாசனும், அவரது மனைவியும் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது மகன் வீட்டில் இல்லை. நண்பர்க ளிடம் விசாரித்தபோது வேறு நபருடன் ராஜ பாளையத்திற்கு சென்றதாக கூறினர். ஆனால் எங்கு சென்றார்? என கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகேயுள்ள தியாகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது மகள் பிளஸ்-2 படிக்கிறார். அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை ஜெயலட்சுமி கண்டித்தார். இந்த நிலையில் இரவு தூங்கிக்கொண்டிருந்த மாணவியை அதிகாலையில் எழுந்து பார்த்தபோது காணவில்லை.

    எங்கு சென்றார்? என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் வச்சக்காரபட்டி போலீஸ் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தறுமாறு ஜெயலட்சுமி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    சாத்தூர் அருகேயுள்ள சிப்பிபாறையை சேர்ந்தவர் வெங்கடசாமி(63). இவர் அங்குள்ள தோட்டத்து பங்களா ஒன்றில் தங்கி யிருந்தார். இந்தநிலையில் திடீரென்று மாயமானார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி முத்துலட்சுமி(38), நர்சிங் கல்லூரியில் பகுதிநேர ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்களாகிறது. கணவன் -மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. சிவகாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் பேசி சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.

    இந்தநிலையில் மீண்டும் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்ற முத்துலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்க வில்லை. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் விஜயன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் மரிய லியோஜன். இவரது மனைவி ரமணி(27). இவர் கணவருக்கு தெரியா மல் பெண் ஒருவரிடம் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் கடன் வாங்கியதாக ெதரிகிறது. இது தெரியவந்ததும் கணவர் கண்டித்தார்.

    இந்த நிலையில் கடைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×