என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- விருதுநகர் மாவட்டத்தில் தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.
- விருதுநகர் மாவட்டத்தில் தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கபா்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.
விருதுநகர்
அரசு விதிமுறைகளை பின்பற்றாத வணிகநிறுவ னங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:- தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்த சட்டம் 2021-ன்படி கடைகள் மற்றும் நிறுவ னங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் நிறுவ னங்களில் பணி புரியும் அனைத்து தொழிலா ளர்களுக்கும் தங்களது பணி நேரம் முழுவதிலும் நின்று கொண்டே இருப்பது மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க அவர்கள் பணிபுரியும் இடங்களில் அனைத்து தொழிலாளர்களுக்கும் தகுந்த இருக்கை வசதி செய்து தரப்பட வேண்டும் என சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேற்படி சட்டதிருத்தத்தை கடைப்பிடிக்காத 12 நிறுவன உரிமையாளர்கள் மீது 1947-ம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் பிரிவு 22-ன் கீழ் நோட்டீஸ் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
மேலும் தமிழில் பெயர் பலகை வைக்காத 5 திருமண மண்டப உரிமையாளர்கள் உள்பட 39 கடைகள், நிறுவன உரிமையாளர்கள் மீது 1948-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்களின் விதி 15-ன் படியும் மற்றும் ஒரு உண வக உரிமையாளர் மீது 1950-ம் ஆண்டு தமிழ்நாடு உணவு விடுதிகள் விதி 42-ன்படியும் நோட்டீஸ் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தயாநிதி, உமா மகேஸ்வரன், செல்வ ராஜ், பாத்திமா, துர்கா, பிச்சைக்கனி மற்றும் சிவசங்கரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.