search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
    X

    மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

    • விருதுநகர் மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு காரணிகளின் அடிப்படையில் தரமதிப்பீடு செய்யப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    ஊரக வளர்ச்சி துறை அமைச்சரால் மாநில மற்றும் மாவட்ட அளவில் கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்பு றங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்ட மைப்பு ஆகியவற்றிற்கு மணிமேகலை விருது வழங்குவதற்கு 2022-23-ம் நிதி ஆண்டு செயல் திட்டத்தின்படி ரூ.2.10 கோடி ஒதுக்கீடு செய்யப்ப டுவதாக அறிவிப்பு வெளியானது.

    இந்த விருதுக்கு தகுதி யான சமுதாய அமைப்பு களிடம் இருந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்கள் 26.5.2023 முதல் வரவேற்கப் பப்படுகி றது. மேலும் கீழ்க்காணும் காலஅட்டவணையினை பின்பற்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 26.5.2023 முதல் 25.6.2023 வட்டார இயக்க மேலாண்மை அலகில் விண்ணப்பங்கள் பெறுதல், 26.6.2023 முதல் 08.7.2023 வட்டார இயக்க மேலாண்மை அலகில் 12 நாட்களுக்குள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும். 9.7.2023 முதல் 20.7.2023 வரை மாவட்ட இயக்க மேலாண்மை அலகினால் கருத்துருக்கள் ஆய்வு செய்யப்பட்டு மாவட்ட குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும். 21.7.2023 முதல் 31.7.2023 வரை கலெக்டர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவில் ஒப்புதல் பெறுதல்ந நடைபெறும். 20.8.2023 கருத்துருக்கள் மாநில தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும். 3.8.2023 முதல் 18.8.2023 மாநில தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.

    19.8.2023 முதல் 25.8.2023 வரை மாநில அளவிலான குழுவினால் 6 நாட்களில் விருது பெற்றவர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும். மேற்காணும் விருதுக்கு தகுதியான சமுதாய அமைப்புகளிடம் இருந்து 7.7.2023 தேதிக்குள் வட்டார இயக்க மேலாண்மை அலகு மற்றும் பகுதி அளவிலான கூட்ட மைப்புகளில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு 6 காரணிகளின் அடிப்படை யில் தரமதிப்பீடு செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×